Fri. Mar 29th, 2024

உதைபந்தாட்ட உதயம் கிண்ணம் ஹென்றிஸ் அக்கடமி வசம்

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் உதைபந்தாட்டத்தின் உதயம் அக்கடமிகளுக்கான 16 வயதுப்பிரிவினருக்கான கால்பந்தாட்ட போட்டியில் ஹென்றிஸ் அக்கடமி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் நேற்று திங்கட்கிழமை உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன் இறுயாட்டத்தில்  இளவாலை கென்றிஸ் அக்கடமி அணியை  எதிர்த்து மயிலையூர் ஸ்ரார் அக்கடமி அணி  மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதிவரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடினர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில்  கென்றிஸ் அக்கடமி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

மூன்றாம் இடத்தை திருக்குமரன் அக்கடமி அணியும்  நான்காம் இடத்தை வேலணையூர் அக்கடமி அணியும்  பெற்றுக் கொண்டனர்.
உடற்கல்வி டிப்ளமோ சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞானத்துறை தலைவர்  கலாநிதி சிவனேசன் சபாஆனந், சிறப்பு விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட அணியின் முன்னால் வீரர் எடிசன், கெளரவ விருந்தினர்களாக நாகராசா மற்றும் திலீபன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் உடற்கல்வி டிப்ளோமா பழைய மாணவனும் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு உதவிகள் பல செய்யும் சுவிஸ் நாட்டில் வாழும் நா.விஜயகுமார் சிறப்பு அதீதியாக கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்