Thu. Apr 25th, 2024

உணவக உரிமையாளர்களுக்கு அபராதம்

கரவெட்டி சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பிரிவில் சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் குறைபாடுகள் உள்ள உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்பட்ட நிலையில்,  ஒவ்வொரு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபாவும்,  இரு குற்றங்கள் சுமத்தப்பட்டவர்களுக்கு தலா ஆறாயிரம் ரூபாவும் அபராதம் வழங்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கரவெட்டி சுகாதார பணிமனை, நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவினர் மற்றும் அல்வாய் பொதுச் சுகாதார பிரிவினர் பகுதிகளிலேயே உணவகங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவில் அண்மைக்காலமாக உணவகங்கள் சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 14ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெல்லியடி சுகாதார பரிசோதகர் பிரிவில் 5 உணவகங்கள் மற்றும் அல்வாய் பிரிவில் ஒரு உணவகத்திலும் உணவு பரிமாறுபவர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை, உணவு பாதுகாப்பு உடை இன்றி இருந்தமை மற்றும் வெற்றிலை பாக்கு மென்று கொண்டு உணவு பரிமாறியமை, மற்றும் பாதுகாப்பற்ற முறையில் எலிகளின் நடமாட்டத்துடன் களஞ்சிய அறையைப் பேணியமை போன்ற குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதில் நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகரால் 6 வழக்கும், அல்வாய் பொதுச் சுகாதார பரிசோதகரால் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்