Sat. Apr 20th, 2024

உடுப்பிட்டி தொகுதிக்கு கலைவாணி பரிந்துரை

தமிழரசுக்கட்சியின் கரவெட்டி பிரதேச சபையின்  உடுப்பிட்டி தொகுதிக்கு திருமதி. கலைவாணி அவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு மாவட்ட கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி பிரதேச சபையின் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இரத்தினம் அவர்கள் அமரத்துவம் அடைந்ததையடுத்து பிரதேச சபை உறுப்பினர் பதவி வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக நடைப்பெற்ற குழுக் கூட்டத்திலேயே கலைவாணி அவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு மாவட்ட கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை. சேனாதிராஜா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக நேற்று உடுப்பிட்டி தொகுதி தலைவர் சுரேந்திரன் (லவன்) அவர்கள் தலைமையில் தொகுதிக்கிளை நிர்வாக கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது.
12 பேர் கொண்ட குழுவில் 10 பேர் கூடத்திற்கு சமூகமளித்திருந்தனர்.
இரத்தினம் அவர்களின்  வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு ஏ. இராசையா அவர்களையும் மற்றவர் தமிழரசு கட்சியின் மாவட்ட மகளிர் அணி உபதலைவரும் , தமிழரசுக்கட்சியின் உடுப்பிட்டித்தொகுதி நிர்வாகசபை உறுப்பினருமான திருமதி. கலைவாணி ஆகியோரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. விரிவாக அனைத்து நிர்வாக உறுப்பினர்களினதும் கருத்துப்பகிர்வினை ஏற்றுக்கொண்டு தெரிவு தனித்தனியாக ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட தெரிவினை கேட்டு அறிக்கையிட்ட பின்னர்  செயலாளரும் கௌரவ முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சிவயோகன் அவர்களினால் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் திருமதி. கலைவாணி 6 வாக்குகளையும்,ஏ. இராசையா 3 வாக்குகளையும் பெற்றனர். ஒருவர் நடுநிலை வகித்தார்.
உடுப்பிட்டித் சொகுதித் தலைவர் சுரேந்திரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ஏனைய கட்சிகளில் பெண்களுக்கான சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் தமிழரசுக் கட்சியில் இதன் வாய்ப்பு இடம்பெறாமல் இருந்தது.அந்த வகையில் கலைவாணியின் பரிந்துரை சிறப்பு மிக்கதாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நடுநிலை வகித்த ஜெகநாதன்  கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு தான் பிரதேச சபை உறுப்பினராக இருந்த போதிலும் ரெலோ கட்சி சார்பில் மகாநோசன் என்பவரை நிறுத்திய போதிலும் அவருக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வெல்ல வைத்த போதிலும்,  ஆனால் இராசையா என்பவரின் வட்டாரத்தில் வேறொருவரை நிறுத்தியதன் காரணத்தால் இந்த முறை வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம், வேறொரு கட்சிக்கு வாக்களியுங்கள் எனவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு அவரை தோல்வியடையச் செய்துள்ளார். இருப்பினும் அவர் கட்சிக்கு நீண்ட காலமாக சேவையாற்றியதன் காரணத்தால் தான் நடுநிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்