Fri. Mar 29th, 2024

உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் எஸ். செல்லக்குமரன் அவர்களின் பிரிவுபசார நிகழ்வு

வடமராட்சி வலய உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் எஸ்.செல்லக்குமரன் அவர்களுக்கான

பிரிவு உபசார நிகழ்வு யா/வடமராட்சி மத்திய மகளிர்  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் கெளசிகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன், வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் இ. ராஜசீலன்,
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி பிரதி அதிபர் செல்வி.சிந்தாமணி ஜெயலக்ஷ்மி, பருத்தித்துறை  கோட்டக் கல்வி பணிப்பாளர் நவநீதமணி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்