Thu. Apr 25th, 2024

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேவை கருதிய இடமாற்றம் விளையாட்டுத்துறைக்கு குந்தகம் – ப.தர்மகுமாரன்

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேவை இருக்கும் வலயங்களில் இருந்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது மாணவர்களின் விளையாட்டு செயல்பாட்டிற்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதுடன் வடமாகாணை விளையாட்டு எழுச்சியை வீழ்ச்சிக்கு  உட்படுத்தும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேவை கருதிய சேவை இடமாற்றம் என்பது பொருத்தமான பாடசாலைக்கு ஆசிரியர் தேவை இருப்பின் அங்கு இடமாற்றம் பெறாத ஆசிரியர்களை இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் மாற்றம் வழங்குதல். ஆனால் வடமாகாணத்திற்குட்பட்ட சில வலயங்களில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்படுகின்ற அதேவேளை பல வலயங்களில் வெற்றிடமே இல்லை. இருந்தபோதும் மேலதிகமாக உடற்கல்வி ஆசிரியர்களை அனுப்பி தேவை உள்ள பாடசாலையை அவல நிலைக்கு தள்ளுகின்றனர். இன்றைய நிலையில் யாழ் வலயம் மற்றும் வலிகாம வலயங்களில் உள்ள 1AB பாடசாலைகளில் இருந்து உடற்கல்வி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட போதும்  அந்த இடத்திற்கான உடற்கல்வி ஆசிரியர்கள் நிரப்பப்படவில்லை. இதனால் விளையாட்டுப் போட்டிகளை நடாத்த முடியாது திண்டாடுகிறோம் என பாதிக்கப் பட்ட பாடசாலை அதிபர்கள் விசனமடைகின்றனர். இவ்வாறான செயற்பாட்டால் பாதிக்கப்படப்போவது மாணவர்களே. இதனை கருத்தில் கொண்டு வடமாகாணகல்விப் பணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை கருதிய சேவை இடமாற்றம் சிறந்த பொறி முறையாக காணப்படுகின்ற போதும் அதனை கையாளுகின்ற தன்மை பொலிவிழந்தே காணப்படுகின்றது என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்