Wed. Apr 17th, 2024

ஈரான் மீது புதிய பொருளாதார தடை -டிரம்ப் அதிரடி

கடந்த வாரம் ஆளில்லா விமானம் ( ட்ரோன்) வீழ்த்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது “கடுமையான” புதிய பொருளாதாரத் தடைகளை விதித்து நிறைவேற்று ஆணையில்(Executive Order) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார்.

ஈரான் அதனது அணுசக்தி மற்றும் அதன் ஆபத்தான நடவடிக்கைகளை கைவிடும்

வரை நாங்கள் அதன் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்” என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.

.ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க ஒருபொழுதும் எங்களால் அனுமதிக்க முடியாது, நாங்கள் ஈரானுடனோ அல்லது வேறு எந்த நாட்டுடனோ மோதலை விரும்பவில்லை என்று டிரம்ப் மேலும் தெரிவித்தார்

புதிய பொருளாதாரத் தடையானது ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் முக்கிய அமைச்சுக்கான நிதி நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கும். கமேனியின் சொத்துக்களும் இதன் மூலம் முடக்கபட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவத் தளபதிகளும் இந்த தடைக்கு உட்பதடுத்தப்பட்டுள்ளார்கள.
ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுப்பதற்காக அதன் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான தனது திட்டங்களை டிரம்ப் கடந்தவாரம் அறிவித்திருந்தார். அமெரிக்கா ஏற்கனவே ஈரானின் எண்ணெய் மற்றும் பிற துறைகளில் பொருளாதாரத் தடைகளைக் விதித்துள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் போது ஒப்பந்தம் செய்யப்பட்ட பலதரப்பு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை டிரம்ப் வெளியேற்றியதிலிருந்து யு.எஸ் மற்றும் ஈரானுக்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. அந்த ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட சில தடைகள் யு.எஸ். வெளியேற்றப்பட்ட பின்னர் மீண்டும் நடைமுறைக்கு வந்தன.

 

ஹார்முஸ் கால்வாய்க்கு அருகே இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சமீபத்திய வாரங்களில் அந்த பதற்றங்கள் அதிகரித்துள்ளது .
கடந்த வியாழக்கிழமை, ஈரானிய வான்பரப்புக்கு சமீபமாக ஒரு அமெரிக்க ஆளில்லா வேவுவிமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. சர்வதேச வான்பரப்பில் இருந்த தனது விமானத்தை ஈரான் சுட்டதாக அமெரிக்காவும் , தனது வான்பரப்பிலேயே அது பறந்து கொண்டிருந்தது என்று ஈரானும் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்திவருகின்றார்கள். கடந்த வெள்ளிக்கிழமை கடைசி நிமிடத்தில் தாக்குதல் திட்டத்தில் இருந்து அமெரிக்கா பின்வாங்கி இருந்தது. இது ஒரு டிரம்பின் ராஜதந்திர தாக்குதல் உத்தி என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்