Fri. Apr 26th, 2024

இலவச அப்பியாச கொப்பிகளுக்கான பண அறவீடு பெற்றோர் விசனம்

இலவச அப்பியாச கொப்பிகளை வழங்கிய போது அப்பியாச கொப்பிகளுக்கான பணம் பெறப்படுவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது மாணவர்களிற்கான அப்பியாச கொப்பிகளின் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு யுனிசெவ் நிறுவனத்தால் பாடசாலைகளுக்கு இலவசமாக கொப்பிகள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த கொப்பிளை ஏற்றிவருவதற்கான கூலி எனக் கூறி பெற்றோரிடம் பணம் அறவிடப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் சில அரச பாடசாலையில் பாடசாலையில் இருந்து வெளியேறும் மாணவர்களிடமிருந்தும், பாடசாலைக்கு இணையும் மாணவர்களின் பெற்றோரிடமிருந்தும் பணம் அறவிடப்படுவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வடமாகாண ஆளுநர் செயலகத்தால் வடமாகாண ஆளுநரின் மேற்பார்வையில் “அபயம்” என்ற தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்