Fri. Apr 26th, 2024

இணுவில் குப்பை கொட்டும் இடம் பார்வையிட்டனர்

  • இணுவில் காரைக்காலில் அமைந்திருக்கும் நல்லூர் பிரதேச சபையின் திண்மக் கழிவு அகற்றும் நிலையத்திற்கு நல்லூர் பிரதேச சபை  தவிசாளர் மயூரன், உப தவிசாளர் ஜெயகரன், மற்றும் உறுப்பினர்கள் கௌசலா, வி.கே.குகானந்தன்ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

திண்மக்கழிவு தரம் பிரித்தல் சம்பந்தமாக எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை நேரில் சென்று இன்று ஞாயிற்றுக்கிழமை  பார்வையிட்டனர். நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திண்மக் கழிவுகளை அகற்றும் இடமாக இணுவில் காரைக்காலில் அமைந்திருக்கும் இடம் காணப்படுகிறது. இதில் உக்கக்கூடிய, உக்க முடியாத பிளாஸ்டிக், பொலித்தீன்கள் என அனைத்து வகையான குப்பைகளையும் ஒன்றாக கொட்டுவதனால் மீள் சுழற்சிக்கு பயன்படுத்த முடியாது போயுள்ளது. அத்துடன் அப்பகுதியில் 50 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.  இக்குப்பையால் அவர்கள் பல அசெளகரியங்களை ஏற்படுவதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதையடுத்து, தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் பார்வையிட்டு குப்பைகளை தரம் பிரித்து மீள்சுழற்சிக்கு பயனபடுத்துவதாகவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்