Fri. Apr 19th, 2024

இடமாற்றங்கள் அனைத்தும் அடுத்த மாத நடுப்பகுதியில் நடைபெறும்

நாட்டின் சகல பாடசாலைகளிலும் பத்து வருடங்கள் மற்றும் வருடாந்த இடமாற்றப் பரிந்துரைக்கு அமைய கீழ்வரும் காரணங்களின் அடிப்படையில் விஷேட மேன்முறையீட்டுக்கான ஆசிரியர்களைத் தவிர ஏனைய இடமாற்றங்கள் 2023.04.17 தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி அமைச்சின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது

க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர வகுப்புகளில் கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும் ஆசிரியர்களின் இடமாற்றம் காரணமாக மாணவர்களுக்கு ஏதும் பாதகம் ஏற்படுமாயின் அது தொடர்பாக அதிபரின் ஊடாக முன்வைக்கப் படும் மேன்முறையீடு விஷேட மேன்முறையீட்டு குழுவினால் மீண்டும் ஆராந்து பார்க்கப்படும்.

இதுவரை வழங்கப் பட்டுள்ள சகல தற்காலிக இணைப்புக்களும் 2023.06.30 வரை நீடிக்கப்படுகிறது. ஆயினும் 2023.06.30 ஆம் திகதிக்கு முன்னர் இடமாற்றம் பெறும் ஆசிரியர்கள் இடமாற்றக் கடிதம் கிடைக்கப் பெற்றதும் உடனடியாக அதற்கு அமைய செயற்பட வேண்டும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்