Wed. Apr 24th, 2024

ஆசிரியர்களுக்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையை பொறுப்பேற்க மாட்டார்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்குப் பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுநர்களை பயன்படுத்தப் போவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அறிவித்தமைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களால் இன்று  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
நாளை மறுதினம் ( 21.10.2021 ) பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பாடசாலைகளை திறப்பதற்கு ஆசிரியர்கள் வராவிடின் அவர்களுக்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை / பட்டதாரி பயிலுனர்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் ஊடாக அறிய முடிகின்றது . இதனை எவ்விதத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கமாகிய நாம் ஏற்றுக்கொள்ள முடியாது , நியாயமான முறையில் தமக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பிற்காக போராட்டங்களை முன்னெடுத்துவரும் ஆசிரியர்களின் போராட்டத்தை மழுங்கடிக்கும் விதத்தில் இவ்வாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை, பட்டதாரி பயிலுனர்களை பயன்படுத்த திட்டமிடுவதன் ஊடாக ஆசிரியர்களை மட்டுமல்ல எம்மையும் அவமதிப்பு செய்வதாக அமையும் என்பதோடு, தொழில் சங்கங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதாகவும் அமையும். எனவே இதனை உடனடியாக கைவிடுமாறு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை கேட்டுக்கொள்வதோடு , இவ்வாறான செயற்பாடுகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் / பட்டதாரி பயிலுனர்கள் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்