Thu. Apr 25th, 2024

ஆசிரியர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வடமாகாண கல்வித் திணைக்களம்

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் செயற்பாடு ஆசிரியர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நடவடிிக்கையாக அமைந்துள்ளதாக வடமாகாண அதிபர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நாளை 4ம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ம் திகதி வரை மாணவர்களுக்கான முன்னோடி  பரீட்சையை நடாத்தவுள்ளது.
இதற்காக பரீட்சை நேரசூசி அட்டவணை குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண கல்வித் திணைக்களத்தால் முன்னோடி பரீட்சைக்கான வினாத்தாள்கள் குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை அவர்கள் போட்டோ கொப்பி எடுத்து மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் வீட்டில் பரீட்சை எழுதி பின்னர் பாடசாலைகளில் ஒப்படைக்க வேண்டும். அதனை குறித்த ஆசிரியர்கள் திருத்தி மாணவர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளால் zoom இன் ஊடாக விளங்கப்படுத்தப்படும் இதுவே மாகாண கல்வித் திணைக்களத்தின் செயற்பாடு.
இது தொடர்பாக அதிபர்கள், ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் நடவடிக்கை சிறிய கிராமப் புற பாடசாலைகளுக்கு பொருந்தும். ஆனால் நகர் புறங்களில் உள்ள பாடசாலைகளில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்து பேரூந்துகளிலேயே மாணவ மாணவிகள் பாடசாலைகளுக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு பாடசாலைகளுக்கு மாணவர்களை பொதுப் போக்குவரத்தில் அழைத்து பரீட்சை செயற்பாடுகளை முன்னெடுப்பது சாத்தியமற்ற செயற்பாடாகும்.
தற்போது சம்பள உயர்வு கோரி  அரசினால் வழங்கப்படும் 5ஆயிரம் ரூபாவை புறக்கணித்து போராட்டத்தை தொடரும் நேரத்தில் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் செயற்பாடு வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் கூட ஏனைய மாகாண கல்வி திணைக்களங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் வடமாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் அரசுக்கு தான் சிறந்த அதிகாரி என்பதனை காட்டிக் கொள்வதற்கு எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பயணத் தடை நீக்கப்பட்டு முதற் கட்டமாக 200ற்கு குறைந்த ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்