Fri. Mar 29th, 2024

அல்வாயில் பெண் நாய்களுக்கான கருத்தடை

பருத்தித்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட அல்வாய் பொதுச் சுகாதார பிரிவில் வளர்ப்பு மற்றும் கட்டாக்காலி பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள விரும்புவோர் குறித்த பகுதி பொதுச் சுகாதார பரிசோதகருடன் தொடர்பு கொண்டு தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் நாய்களுக்கான கருத்தடையை மேற்கொண்டு கட்டாக்காலி நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி விலங்கு விசர்நோய்க் கட்டுப்பாட்டிற்கு ஒத்துழைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்