Fri. Mar 29th, 2024

அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் வருடாந்த பெருந்திருவிழா நாளை ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க  வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா நாளை  சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் அர்சகர்கள்  கிரியைகளுடன் ஆரம்பித்து 8:45 மணியளவில்  கொடியேற்றம் இடம் பெறவுள்ளது.
17 தினங்கள் நடைபெறும் இப் பெரும் திருவிழா எதிர்வரும் 10/10/2022 ம் திகதி  திங்கட்கிழமை நிறைவடையவுள்ளது.
நாளை 24/09/2022 முதல் 30/09/2022 வரை வல்லிபுரத்து ஆழ்வார்  உள்வீதி உலா வருவார்.
01/10/2022 அன்றிலிருந்து வல்லிபுரத்து ஆழ்வார் குருக்கட்டு விநாயகர் ஆலய தரிசனத்துடன்  அனைத்துத் திருவிழாக்களின் போது சுவாமி வெளிவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
முக்கிய திருவிழாக்களான வெண்ணெய்த்திருவிழா 02/10/2022ம்  திகதியும், துகில்த்திருவிழா 03/10/2022 திகதியும்,  பாம்புத்திருவிழா 04/10/2022  திகதியும், கம்சன் போர்த்திருவிழா 5/10/2022 ம் திகதியும்,  வேட்டை திருவிழா 6/10/2022 ம்  திகதியும், சப்பறத்திருவிழா 7/10/2022 ம்  திகதியும் , தேர்த்திருவிழா 8/10/2022 திகதி சனிக்கிழமையும்,  சமுத்திர தீர்த் திருவிழா 9/10/2022 ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும்,  கேணி தீர்த்தமும் 10/10/2022 திங்கட்கிழமையும்,  கொடி இறக்கம்  அன்றைய நாள் பிற்பகல் 6:00 மணிக்கும்  இடம்பெறவுள்ளன.
பெருந்திருவிழாக்களுக்கான வசதிகள் அனைத்தும் ஆலய நிர்வாகம், பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், பருத்தித்துறை காவல் நிலையம்   என்பனவற்றால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேவளை ஆலயத்திற்கு வருகை தருவோர் கலாசார உடை அணிந்து, தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்த்து, ஆசார சீலர்களாக வருகைதருமாறு ஆலய நிர்வாகம் கோரியுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்