Sat. Apr 20th, 2024

அரச உத்தியோகத்தர்கள் வலைப்பந்தாட்டம் யாழ் மாவட்ட உத்தியோகத்தர்கள் அணிகள் சம்பியன் மற்றும் வெள்ளிக் கிண்ணங்கள்

அரச உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் நடத்தப்பட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட அரச உத்தியோகத்தர்கள் அணி சம்பியன் மற்றும் வெள்ளிக்கிணாணங்களைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டங்கள் நேற்று கொழும்பில் தெமத்தகொட ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட அரச உத்தியோகத்தர் அணி 40 வயதிற்குட்பட்ட விலகல் முறையில் சம்பியன் கிண்ணத்தையும், சுழற்சி முறையில் இரண்டாமிடத்தையும்,  40 வயதிற்கு மேற்பட்ட அணி இரண்டாமிடத்தையும் கைப்பற்றினர்.
விலகல் முறையிலான இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் அணியை எதிர்த்து இலங்கை ரயில் நிலைய தினைக்கள உத்தியோகத்தர்கள் அணி மோதியது. இதில் யாழ் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் அணி 16:7 என்ற புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
சுழற்சி முறையிலான போட்டியில்
யாழ் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் அணி Labor Department , Railway Department Pension Department ஆகியவற்றுடன் வெற்றி பெற்று இறுதியில் Prison அணியுடனான போட்டியில் 8:6என்ற அடிப்படையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியின் இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் அணியை எதிர்த்து  இலங்கை பொலிஸ் தலைமையகம் கொழும்பு அணி மோதியது. இதில் யாழ் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் அணி 14:6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தேல்வியடைந்து இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்