Fri. Apr 26th, 2024

அரச அலுவலர்களின் அக்ரஹாரா காப்புறுதி

அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அலுவலர்களின் அக்ரஹாரா காப்புறுதி தொடர்பான தகவல்களை கணனிமயப்படுத்தும் நோக்கில்,

தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் வலைத்தளத்தின் தங்களின் விபரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.nitf.lk/en/member_login/signin.php என்ற இணைப்பிற்கு சென்று, அரசாங்க அலுவலர்கள் தங்களது தகவல்களை 31.05.2022 ற்கு முன்னதாக இற்றைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அக்ரஹாரா காப்புறுதி தொடர்பான அனைத்து விடயங்களும் Online ல் மேற்கொள்ளப்படும் என்பதால்,

தகவல்களை உள்ளிடும் போது சரியான தகவல்களை உள்ளிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சகல அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அக்ரஹார தொடர்பிலான 12/2005 ஆம் இலக்க சுற்றறிக்கை 2005.01.01 ஆந் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பகின்றது நிரந்தர ஒய்வூதியத்திற்கு உரித்துடைய

அனைத்து அரசாங்க மற்றும் மாகாண அரச சேவையில் உள்ள அலுவலர்களும் இதற்குத் தகைமை பெறுவார்கள். அத்துடன் பகுதி அளவிலான அரச ஊழியர்களும் தகுதி பெறுகின்றனர்.

செய்முறை வீடியோ
https://tinyurl.com/ds-Tellipalai-Ag

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்