Fri. Mar 29th, 2024

அரசாங்கம் ஆசிரியர்கள் மாணவர்களின் பிரச்சனைகளில் அசமந்த போக்கு காட்டி வருகிறது – ப.தர்மகுமாரன்

அரசாங்கம் ஆசிரியர்கள் மாணவர்களின் பிரச்சனைகளில் அசமந்த போக்கு காட்டி வருவதாக      உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஆசிரியர்கள், மாணவர்களின் நிலையை உணராமல் செயல்பட்டுக் கொண்டிருப்பது எதிர்காலத்தில் நாட்டை ஆதாளபாதாளத்திற்குள் கொண்டு செல்லும். ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமை நாட்டின் அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதில் பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் பொருளாதார நெருக்கடி கற்றல் கற்பித்தல் செயல்பாட்டை பாதிப்படைய செய்துள்ளது. மின்சார கட்டண அதிகரிப்பும் கற்றலை கட்டுப்படுத்துகின்றது. மந்த போசனை நிலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதுடன் குறைபாட்டு நோய்கள் உருவாகி கல்விக்கு இடையூறு விளைவிக்கின்றன. கிராமபுற மாணவர்கள் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு நாட்டில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. கற்றல் உபகரணங்களின் விலை அதிகரித்துள்ளது. காலணிகள் வாங்கமுடியாதளவிற்கு விலை எகிறியுள்ளது. விளையாட்டு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு கட்டுப்பாடு விலை அதிகரிப்பு, விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு போசணையான உணவு கிடைக்காமை போன்ற பிரச்சனைகள் நாட்டில் தலைவிரித்து நாட்டை தள்ளாட வைத்துள்ளதுடன் மாணவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இருள்சுழ செய்துள்ளது. இதில் இருந்து விடுபட்டு சுபீட்சமான எதிர்காலத்திற்காக அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றினைவோம் ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்