Thu. Apr 25th, 2024

அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது.

அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் வடமாகாணத்தில் பல இடங்களில் பொலீஸாரால் மூடப்பட்டதோடு நெல்லியடி சந்தையில் இராணுவத்தினர் மற்றும் பொலீஸாரால் வர்த்தக நிலையங்களில் அதிகளவில் ஒன்று கூடியோரை புகைப்படமும் எடுத்துள்ளனர். பருத்தித்துறை பகுதியில் தேவையற்ற விதத்தில் நடமாடியோரின் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனங்களும் காற்றுத் திறந்து விடப்பட்டது.
அத்துடன்  கிளிநொச்சி நகரில் திறக்கப்பட்ட வியாபார நிலையங்களில் அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை பொலீஸார் உடனடியாக மூடியுள்ளனர்.
இன்று காலை முதல் கிளிநொச்சியின் நகரில் பெரும்பாலான வியாபார நிலையங்கள்
திறக்கப்பட்டிருந்தன. பொது மக்களும் வழமை போன்று நகருக்கு வந்திருந்தனர்.
ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை திறப்பதற்கு தடை என அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக கிளிநொச்சியில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்