Wed. Apr 24th, 2024

அதிபர், ஆசிரியர்களுகாகான மகிழ்ச்சியான செய்தி

ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்குதல் தொடர்பாக நேற்று முன்தினம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.கபில சீ.கே.பெரேரா அவர்களினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் அமைச்சரவை பத்திரம் இலக்கம் 21/1563/302/023 -1 மற்றும் 2021.08.30 திகதிய அமைச்சரவை அறிக்கை தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைக்கு அமைய 2021 நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2022 ஆம் வருட வரவு செலவு முன்மொழிவு மூலம் ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு அரசினால் பொருத்தமான அவசிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது . என்றாலும் , அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு உரிய கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர் அதிபர்களை ஊக்குவிக்கும் முகமாக 2021 செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் இரண்டுக்கும் ஒரு மாதத்துக்கு 5000 / = ரூபாய் என்றவாறு கொடுப்பனவு செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது . அதன்படி , உரிய கல்வி வலயங்களின் அதிபர்களினால் பரிந்துரைக்கப்பட்டு வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் கடமையை மேற்கொண்ட ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியலை அடிப்படையாகக்கொண்டு இந்த
5000/= ரூபா கொடுப்பனவை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். .. அதிபர்களுக்கு கொடுப்பனவை செலுத்தும் போது வலயக் கல்வி பணிப்பாளர்களின் பரிந்துரை அடிப்படையில் உரிய கொடுப்பனவு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்