Sat. Apr 20th, 2024

அதிகாரிகள் முறைகேடு- மக்கள் அலைக்கழிப்பு- பலரும் விசனம்

பெற்றோல் விநியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் அனைத்து அதிகாரிகளும் ஒரு பொறிமுறையில்லாது மக்களை அலக்கழியச் செய்யும் செயற்பாட்டிலேயே ஈடுபட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலகதால் அட்டை கொண்டுவரப்பட்டது. அதற்கு மக்கள் பலரும் கிராம சேவகர்களிடம் காத்திருந்து பெற்றனர்.  அது செயல்பட முன்னர் யாழ் மாவட்டச் செயலகம் ஒரு அட்டை வெளியிட்டது. அது அரச உத்தியோகத்தர்களுக்கு நீல அட்டை,  ஏனையோருக்கு வெள்ளை அட்டை என்றார்கள். அதனை பெறுவதற்கும் மக்கள் கிராம சேவகர் உட்பட பிரதேச செயலகங்கள், அரச அலுவலகங்கள் என திரிந்ததுடன் வாகன உரிமை மாற்றம், வீட்டில் ஒருவர் பயன்படுத்தும் வாகனங்களுக்கே பெற்றோல் என பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்ததுடன், எந்தெந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றுக் கொள்வது எனப் பல கேள்விகள்.  இதில் ஒன்று இல்லை என்றாலும் அட்டை பெற முடியாது. அவ்வளவு கெடுபிடி. மக்கள் அலைக்கழிந்து ஒருவாறு பெற்றோல் பெற்று வந்தால் தற்போது ஒன்றும் தேவையில்லை QR என்கிறார்கள். ஏன்? நீல, வெள்ளை அட்டை ? எந்தெந்த எரிபொருள் நிரப்பு நிலையம்? இதில் ஒன்றையேனும் நடைமுறைப்படுத்தினார்களா?
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை அறிவித்தால்? குறித்த இலக்கங்களுக்கு சில பிரதேசங்களில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம்,  சில இலக்கங்களுக்கு 4 எரிபொருள் நிரப்பு நிலையம் என வகுக்கிறார்கள். இதனை விட கண்காணிப்பு கடமையில் ஈடுபடும் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள்,  எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் முறைகேடு என பலரும் முறைப்பாடு,  தற்போது அவர்களும் கடமையிலிருந்து விலகல், இதனை விட இன்று வடமராட்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 3,4,5 ற்கு விசேட அழைப்பு. இதனால் இன்று பெற வேண்டிய 6,7,8,9 இலக்கத்தில் பலரும் எரிபொருள் பெறாமல் காலை முதல் காத்திருந்து வீடு சென்றனர். இன்று விசேட ஏற்பாடு செய்த பிரதேச செயலாளர் வடமராட்சி பிரதேசத்திற்குரிய 3,4,5 அவர்களுக்கு மாத்திரம்  உரிய அட்டையையும் பார்த்து QRயும் பார்க்கச் சொல்லி இருக்கலாம்.  அவ்வாறில்லாமல் அறிவித்ததால் பல இடங்களில் இருந்தும் வந்தவர்களால் மீண்டும் பலரும் ஒருதடவையேனும் பெற்றோல் பெறாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு அதிகாரிகளின் அசமந்தப் போக்கை அடுக்கிக் கொண்டே செல்லலாம். சமையல் எரிவாயு அது ஒரு புறம்.
இவ்வாறு தட்டுப்பாடான பொருட்களை அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்வதற்கு ஒரு பொறிமுறை தெரியாதவர்கள். மாவட்ட அலுவலகத்தில் பணி புரிவதற்கு உத்தியோகஸ்த்தர்கள்,  பிரதேச செயலாளர் அதற்கு பணிபுரிபவர்களின் எண்ணிக்கை,  பலரும் பல பட்டங்களை பெற்றவர்கள்.
ஏன் இவர்களால் சரியான தீர்வை பெற முடியவில்லை எனவும் மக்கள் தமது ஆதங்கத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்று வடமராட்சி பகுதியில் பெற்றோல் 2 மணிக்கு வந்தது 4.20ற்கு மின்சாரம் தடைப்பட பெற்றோலும் தீர்ந்து விட்டதாம், 6600 லீற்ரர் பெற்றோல் 2 மணித்தியாலங்களில் வழங்கி வைக்கப்பட்டது. மின்சாரம் தடைப்பட்டால் ஜெனரெக்ரர் பாவிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்ட போதிலும் ஏன் ஜெனரெக்ரர் இல்லாமல் பெற்றோல் நிரப்பப்படவில்லை.
குறித்த பெற்றோல் எங்கு செல்கிறது. தயவு செய்து அதிகாரிகள் தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். ஒவ்வொரு இடத்திலும் முறைப்பாடு தெரிவித்தால் விசாரணை நடத்தி கட்டுப்படுத்துங்கள். எரிபொருள் முறைகேடு என ஆதார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. என்ன நடவடிக்கை? சமையல் எரிவாயு பதுக்கல் , பிரதேச செயலாளர் அனுமதியின்றி வழங்கல் ? என்ன நடவடிக்கை? தொடர்ந்தும் அதே முறைகேடு.  இவற்றை எல்லாம் பார்க்கும் போது அதிகாரிகளுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்படுகிறதா எனவும் சந்தேகம் நிலவுகிறது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்