Fri. Mar 29th, 2024

அஞ்சல் உத்தியோகஸ்த்தர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

அஞ்சல் உத்தியோகத்தர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை சகல தபால் நிலையங்களும் திறக்கப்படும் என தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார். தபால் மா அதிபர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை  இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தை சுமுகமா நடைபெற்றதாகவும் நாளை முதல் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களை கடமைக்கு திரும்புமாறும் தபால் சேவை சங்க முன்னணியின் தலைவர் K. M. சிந்தக்க பண்டார அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் தபால் அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைய அஞ்சல், உப அஞ்சல் அலுவலகங்கள் கிழமை நாட்களில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை பொதுமக்கள் சேவைக்காக திறக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. எனினும் ,இதன் மூலம் தமது சலுகைகள் கிடைக்காமல் போவதாக தெரிவித்து அஞ்சல் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் தபால் மா அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனை காரணமாக போக்குவரத்து பிரச்சனைகளை எதிர் நோக்கும் அரச அலுவலர்களுக்கு சலுகை வழங்க பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை வழங்கப்பட்டது. அதன்படி வெள்ளிக்கிழமை அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. எமது திணைக்களம் அவ்வாறு வெள்ளிகிழமை விடுமுறை வழங்கினால் சனிகிழமை கொடுப்பனவு செய்யமுடியாமல் போகும் என்ற காரணத்தால் அதை நடை முறைப்படுத்தாமல் திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அனுமதி கேட்டு பொதுநிர்வாக அமைச்சினை கேட்ட போதிலும் அதற்கு அனுமதி தரப்படவில்லை. அதன் காரணமாக அமைச்சின் செயலாளிரின் அனுமதியுடன் 24.06.2022 வெள்ளிக்கிழமையும்  25.06.2022 சனிக்கிழமையும் தபால் திணைக்களத்திற்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் பொது நிர்வாக அமைச்சின் மூலம் எமது திணைக்களம் அத்தியாவசியம் இல்லை என கருதி எதிர்வரும் 10.07.2022 வரை சகல அலுவலகங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டது.

அதற்கு எமது பொது சன கொடுப்பனவுகள் மற்றும் முக்கிய விநியேக சேவை என்பவற்றை சுட்டிக்காட்டிதற்கிணங்க அவர்களால் மூன்று தினங்கள் செவ்வாய் புதன் வியாழன் கடமை புரிய அனுமதி வழங்கப்பட்டது அதன் படி சுற்று நிருபம் எம்மால் வழங்கப்பட்டது

இருப்பினும் இதனை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து தபால் சேவை அத்தியாவசிய சேவையாக கருதி ஆறு நாட்களும் கடமை புரிய அனுமதிக்குமாறு தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது உண்மையில் சனிக்கிழமை கொடுப்பனவும் மேலதிக நேர கொடுப்பனவும் இல்லாமல் செய்யப்பட்டு விடும் என்ற பயத்தின் காரணமாகவே இதில் அனைவரும் பங்கு கொண்டனர்.

ஆனால் அவ்வாறான சனிக்கிழமை கொடுப்பனவை நிறுத்தவோ மேலதிக நேரகடமையினை நிறுத்தவோ எண்ணம் எமக்கு இல்லை. இது ஓர் தற்காலிக நடைமுறை என்பதனை கருத்தில் கொள்ளவும்

தற்போதைய சூழலில் எரிபொருள் வேண்டி எம்மால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் எமது திணைக்களத்திற்கு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் எமது தபால் சேவையினை தொடர்ந்து நடத்தி செல்ல குறிப்பிட்ட படி மூன்று தினங்கள் கடமை செய்வது சிறந்தது என கருதுவதால் நாளை செவ்வாய்க்கிழமை 05.07.2022 முதல் கடமைக்கு சமூகமளிக்குமாறு வேண்டுவதுடன் ஊடங்களில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட நடவடிக்ககை எடுக்கப்படும் என்ற விடயங்கள் தவறானவை என்பதனையும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற பேச்சு வார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்