Sun. Nov 15th, 2026

ஹொக்கியில் ஏக ஆதிக்கம் செலுத்தி தெல்லிப்பளை பிரதேச செயலக அணி சம்பியன்

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்ட செயலகத்தின் விளையாட்டு பிரிவினரால் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான ஹொக்கி சுற்றுப் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

யாழ் மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான ஹொக்கிச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதன் இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியை எதிர்த்து சங்கானை பிரதேச செயலக அணி மோதியது.

இதில் ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed