ஹெற்றிக் சாதனை படைத்து மன்னார் கல்வி வலயம் சாதனை
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் மன்னார் கல்வி வலயம் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து ஹெற்றிக் சாதனை படைத்துள்ளனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை முதல் இன்று புதன்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது.
இதில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் மன்னார் கல்வி வலயம் 870 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும்,

வலிகாமம் கல்வி வலயம் 532.5 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும்,

யாழ் கல்வி வலயம் 527 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும், முல்லைத்தீவு கல்வி வலயம் 338.5 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தையும், மடு கல்வி வலயம் 192.5 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தையும், வவுனியா தெற்கு கல்வி வலயம் 182 புள்ளிகளை பெற்று ஆறாம் இடத்தையும், தென்மராட்சி கல்வி வலயம் 154 புள்ளிகளை பெற்று ஏழாம் இடத்தையும், வடமராட்சி கல்வி வலயம் 142.5 புள்ளிகளை பெற்று எட்டாம் இடத்தையும், துணுக்காய் கல்வி வலயம் 132 புள்ளிகளை பெற்று ஒன்பதாம் இடத்தையும், கிளிநொச்சி தெற்கு கல்வி வலயம் 113 புள்ளிகளை பெற்று பத்தாம் இடத்தையும், வவுனியா வடக்கு கல்வி வலயம் 98 புள்ளிகளை பெற்று பதினோராம் இடத்தையும், தீவக கல்வி வலயம் 78 புள்ளிகளை பெற்று பன்னிரெண்டாம் இடத்தையும், கிளிநொச்சி வடக்கு கல்வி வலயம் 69 புள்ளிகளை பெற்று பதின்மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.