ஹாட்லிக் கல்லூரியின் கல்வி கண்காட்சி நிகழ்வு மாணவர்களுக்காக நாளையும் இடம்பெறும்
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கல்வி கண்காட்சி நிகழ்வு பலரின் வேண்டுகோளுக்கிணங்க நாளை புதன்கிழமையும் நடைபெறும் என பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அதிபர் அறிவித்துள்ளார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்களால் கல்விக் கண்காட்சி நேற்றும் இன்றும் நடைபெறும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் இன்றைய தினம் சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலை மாணவர்களால் கண்காட்சி நிகழ்வை பார்க்க முடியாதென அறிவித்துள்ளனர்.
இதனால் பாடசாலை மாணவர்களின் தேவை கருதி பாடசாலைகள் மாணவர்களுக்காக நாளை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கண்காட்சி நிகழ்வு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.