ஹட்டனில் 70 அடி பள்ளத்தில் பாய்ந்த கார், ஓட்டுநர் படுகாயம்.
ஹட்டன் வட்டவளையில் உள்ள ரொசல்ல பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்துக்குள் பாய்ந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலாபதிலிருந்து ஹட்டனை நோக்கி சென்ற கார் ஒன்றே இன்று காலை வீதியை விட்டு விலகி 70 அடி ஆழமான பள்ளத்துக்குள் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரை ஓட்டிச்சென்ற நபர் படுகாயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. பலத்த சேதமைடந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்