எஸ் .பி. திஸ்நாயக்க மற்றும் திலான் பெரேரா பொதுஜன பெரமுனவுடன் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி எம்.பி.க்கள் எஸ்.பி. திஸ்நாயக்க மற்றும் திலான் பெரேரா ஆகியோர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உறுப்புரிமையை பெற்றுள்ளனர்.
இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கட்சி உறுப்புரிமையை பெற்றனர் என்று பொதுஜன முன்னணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில், சுதந்திரக் கட்சியின் மத்திய குழு 2 எம்.பி.க்களையும் அவர்கள் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கியது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில் அவர்கள் கலந்து கொண்டதே இதற்குக் காரணமாகும்