ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 12 பேர் சிலாபம் பகுதியில் வைத்து கைது

சட்டவிரோதமாக கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 12 பேர் சிலாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சிலாபத்தில் உள்ள இரனவில என்ற பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் மீடியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்
சந்தேக நபர்கள் வாளைச்சேனை, வெலிகண்ந்தை , கல்குடா , மற்றும் தொடுவாவை பகுதிகளில் வசிப்பவர்கள் என கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களை இன்று (18) சிலாபம் நீதிமன்றில் மமுன்னிறுத்தபடவுள்ளார்கள்
இது தொடர்பாக சிலாபம் போலீசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.