Wed. Feb 28th, 2024

வொலிபோலில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி ஆதிக்கம்

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி 16,20 வயது பிரிவுகளில் சம்பியன் கிண்ணத்தையும் 18 வயதுப் பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டிகள் அண்மையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணி மோத்யது. இதில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி 25:16, 25:19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணி மோத்யது. இதில் பலத்த போராட்டத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணி 2:1  என்ற செற் கணக்கில் வெற்றி பெற்றது.
20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணி மோத்யது. இதில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்