Fri. Jan 17th, 2025

வைத்தியசாலைக்குள் புகுந்த இராணுவம், பிரபல மருத்துவா் நள்ளிரவில் கைது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னாள் சட்டவைத்திய அதிகாாியும், பளை வைத்தியசாலையில் பொறு ப்பதிகாாியுமான மருத்துவா் சி.சிவரூபன் நேற்று இரவு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

நேற்றிரவு 10 மணியளவில், பளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் தங்கும் விடுதிக்கு சிவில் உடையில் வந்தவர்களால் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரால் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக  அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள போதும், சிவில் உடையில் வந்த பாதுகாப்பு தரப்பினராலேயே அழைத்து செல்லப்பட்டதாக

வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களின் முன்னர் பளையில்  முன்னாள் போராளியொருவர் ஆயுதங்களுடன் கைதாகிய விவகாரத்தில்,

ஏற்கனவே அவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்