வேட்பாளா் நானே ரணில் பகிரங்க அறிவிப்பு, என்ன செய்யபோகிறாா் சஜித்?
ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் யாா்? என கேள்விகள் எழுந்துவரும் நிலையில் தானே ஜனாதி பதி வேட்பாளா் என அதிரடி அறிவிப்பு ஒன்றை பிரதமா் விடுத்துள்ளாா்.
அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பின்போதே பிரதமர் இந்த அறிவிப்பை
விடுத்திருப்பதாக அறியமுடிகின்றது. எவ்வாறாயினும் இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில்தான்
பிரதமர் இருந்ததாகவும், ஆனால் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் மற்றும் அழுத்தங்களைக் கட்டுப்படுத்த இந்த அறிவிப்பை விடுத்திருக்கலாம்
எனவும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருசில அமைச்சர்கள் கூறினர்.