Mon. May 18th, 2026

வேகநடையில் கெளசிகா தங்கம் 

வேகநடையில் கெளசிகா தங்கம்
இளநிலை பிரிவினருக்கான தேசிய மட்ட வேகநடையில் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர். கெளசிகா தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
இளநிலை பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
நேற்று  நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட  பெண்களிற்கான 5000 மீற்ரர் வேகநடையில் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர். கெளசிகா 31:30.80 நிமிடங்களில் நடந்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed