Sun. Oct 6th, 2024

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானது

பளைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த சிறியரக கப் வாகனம் விபத்திற்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காடு சந்தியை அண்மித்த ஏ9 வீதியில் யாழ்நோக்கி விற்பனை பொருட்களுடன்  பயணித்துக் கொண்டிருந்த சிறிய கப் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளார். விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான வாகன சாரதி பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்