வெள்ள அனர்த்தத்தால் மாசடைந்த பிரதேசங்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் -உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்
வெள்ள அனர்த்தத்தால் மாசடைந்த பிரதேசங்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால் சூழல் மாசடைந் துள்ளதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு மிகமுக்கியமாக நீரும் நிலமும் முழுமையாக மாசடைந்தூள்ளது. எனவே வெள்ளம் வடிந்தோடினாலும் தொற்றுக்கிருமிகள் பரவலடைந்தே இருக்கும் இதனால் கிணற்று நீரினை தொற்று நீக்க வேண்டும். மக்கள் நடமாடும் சூழலை தொற்று நீக்க வேண்டும். வெள்ளம் புகுந்த வீடுகள் ஆலயங்கள் பொது இடங்கள் என்பன் தொற்று நீக்குவதுடன், சிறுவர்கள் பாதிக்கப்படாது அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் கிராமபுற மக்களின் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதுடன் பொதுக் கிணறுகளின் பாவனை வெள்ளத்தால் மூடியுள்ளதால் நீர் வசதி இல்லாது கிராமப்புற மக்கள் அவதியுறுகின்றனர். எனவே இயற்கை அனர்த்தத்தின் பின் உடனடியாக மேற்கொள்ள வேண்டியது சுகாதார நடவடிக்கை. ஏனெனில் உணவுப் பிரச்சனை எல்லோராலும் தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது . ஆனால் அரசினால் மட்டுமே சுகாதார பிரச்சனையை தீர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.