வெள்ளை வேன் விவகாரத்தில் கைதான மூவருக்கும் பிணை!!
ராஜபக்சக்கள் மீது வெள்ளை வேன் கட்டத்தல் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்த 3 பேருக்கும் பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் விவகாரத்துடன் தொடர்புடைய ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு சுமார் 10 இலட்ச ரூபாய் வழங்கியதாக கூறி ரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு பிணையில் வெளிச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.