Tue. Sep 8th, 2026

வெள்ளி, ஞாயிறு தினங்களில் மாணவர்களை  அறநெறி வகுப்புக்களில் ஈடுபடுவதற்கான  கடுமையான  நடவடிக்கையை  உள்ளூராட்சி மன்றங்கள்  மேற்கொள்ள வேண்டும் – வேலன் சுவாமிகள்

வெள்ளி, ஞாயிறு தினங்களில் மாணவர்களை  அறநெறி வகுப்புக்களில் ஈடுபடுவதற்கான  கடுமையான  நடவடிக்கையை  உள்ளூராட்சி மன்றங்கள்  மேற்கொள்ள வேண்டும் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தின் வைர விழா நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்திலே ஈழதேசத்திலே இளையோரை ஆன்மீகப்படுத்துகின்றதும் ஆலயத் தொண்டுகளிலும் ஈடுபடுத்தவேண்டிய அவசியமான தேவை இருக்கின்றது.
இந்த வகையில் தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கமும் இந்த வைரவிழாவோடு எழுச்சி பெற்று பல பணிகளை  இந்த மண்ணுக்கு எதிர்காலத்தில் ஆற்ற வேண்டும்.  தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தை முன்னுதாரணமாகக் கொண்டு  இந்த மண்ணிலே ஒவ்வொரு கிராமங்கள் தோறும் இந்து இளைஞர் சங்கங்களும் சைவ வாலிபர் சங்கங்களும் எழுச்சியுற வேண்டும். அதனூடாகவே.ஆன்மீகத்தையும் சைவத் தமிழ்ச் பண்பாட்டையும் இந்த மண்ணிலே தொடர்ந்தும் தக்க வைக்க முடியும்.
சைவத்தையும் தமிழையும் வளர்த்த அப்பாக்குட்டி தங்கம்மா வரிசையில் ஆறுதிருமுருகன் போன்றோரால் தெல்லிப்பழை மண்ணும் இந்து இளைஞர் சங்கமும் வழிநடத்தப்படுகின்றமை மிகப் பெரும் சந்தர்ப்பமேயாகும்.
அதேபோல பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள்  இளைய சமுதாயத்தை ஆன்மீகப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை மாலை  வேளையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை வேளையிலும்
தனியார் வகுப்புக்கள், குழு வகுப்புக்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை நிறுத்தி
வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்களிற்கு சென்று பண்ணிசை, கூட்டுப்பிரார்த்தனையையை மேற்கொள்ளவும் ஞாயிற்றுக்கிழமையில் யோகாசனம், தியானம் ஆகியவற்றிலும் அறநெறி வகுப்புக்களிலும்  ஈடுபடுத்துவதற்கான நடைமுறையை கடுமையைாக நடைமுறைப்படுத்த  வேண்டும் என்ற பொதுவான கோரிக்கையை முன்வைக்கின்றேன். எனத் தெரிவித்தார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed