Mon. Dec 9th, 2024

வெள்ளக்காடாகும் நெல்லியடி, குறட்டை விட்டு தூங்கும் பிரதேச சபை

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நெல்லியடி புதிய சந்தை வெள்ளத்தில் மூழ்கி எங்கும் வெள்ளக்காடாக   இருக்கின்றது.  இதே நிலைமை தான் நெல்லியடி நகர வீதிகளிலும்  மற்றும்  அதனை அண்டிய பகுதிகளிலும் உள்ளது.  நெல்லியடி கடைகளினுள்ளும் நீர் புகக்கூடிய ஆபத்து உள்ளதாக கடைஉரிமையாளர்கள் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளார்கள்.  இது தொடர்பாக பிரசதேச சபைக்கு  பலமுறை எடுத்து கூறியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது பிரதேச சபை உள்ளது.  பிரதேச  சபையின்  கவலையீனம் தான் வாய்க்கால்கள் சீர்செய்து கொள்ளாமையினால் இந்த நிலைமை  இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

தங்கள் அங்கம் வகிக்கும் பிரதேசத்துக்கு வீதி விளக்குகளை பொருத்துவதற்காக தான் எங்களை மக்கள் தெரிந்தெடுத்துள்ளார்கள் என்ற நினைப்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளது பெரும் கவலையாக உள்ளதாகவும் இவர்களின் இவர்களின் அறியாமையை எங்கு சென்று முறையிடுவது என்று மக்கள் அங்கலாய்க்கிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்