வெளிநாட்டவரின் 300 டொலர் பணம் கொள்ளை!! -கோண்டாவிலில் பட்டபகல் சம்பவம்-
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் வெளிநாட்டில் இருந்த வந்த ஒருவரிடம் இருந்து 300 டொலர் பணத்தை கொள்ளையர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று செவ்வாக்கிழமை மாலை கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வெளிநாட்டவர் வீதியால் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த கொள்ளையர்கள் அவரை வழி மறித்துள்ளனர்.
இதன் பின்னர் அவரிடம் இருந்த உடமைகளை பறிமுதல் செய்ததுடன், அவரிடம் இருந்த 300 டொலர் பணத்தினையும் பறிமுதல் செய்துவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்;;பட்ட வெளிநாட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.