Sun. Apr 12th, 2026

வெற்றிலை மென்ற பழ வியாபாரி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவகங்களுக்கு அபராதம்

வல்வெட்டித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளான மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை,
அனுமதிக்கப்பட்ட உணவுத்தர கொள்கலன்களை உணவுப்பொதியிடலுக்கு பயன்படுத்தாது பிளாஸ்ரிக் ரக கொள்கலன்களை பயன்படுத்தியமை, முகச்சவரம் மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவினை கையாண்டமை, உணவு வளவுப்பதிவுச்சான்றிதழ் இல்லாமல் உணவினை உற்பத்தி செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 03 உணவு கையாளும் நிலையங்களிற்கு எதிராகவும் வல்வெட்டித்துறை பொதுச்சந்தையில் வெற்றிலையை மென்ற வண்ணம் பழவியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட பழ வியாபாரியிற்கு எதிராகவும் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் அவர்களால் இன்றைய தினம் (2026.03.13) தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினமே விசாரணையிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 03 உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களும் பழவியாபாரியும் குற்றத்தினை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 3 உணவுகையாளும் நிலையங்களிற்கு 84000 தண்டப்பணமும் பழவியாபாரியிற்கு 10000 தண்டப்பணமும் அறவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed