வெற்றிலை மென்று துப்பியவர்களுக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம்
நெல்லியடி பகுதியில் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய இரு பழ வியாபாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பகுதியில் இயங்கும் வியாபார நிலையங்கள் பொதுச் சுகாதார பரிசோதகர் ம. பிரபாகரன் அவர்களால் வழமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் நெல்லியடி புதிய சந்தையில் இயங்கும் இரு பழ வியாபாரிகள் வெற்றிலையை மென்று பொது இடத்தில் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் துப்பிய குற்றச்சாட்டில் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபா படி 20 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறிவிக்கப்பட்டுள்ளது