Sat. Jul 13th, 2024

வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய திருவிழா

வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று மற்றும் நாளை இடம்பெற உள்ளது.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா திருப்பலி இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் இடம்பெற உள்ளது.
கட்டைக்காடு பங்குத்தந்தை அ.அமல்ராஜ் அடிகளார் தலைமையில் இன்று மாலை  5.00 மணிக்கு ஆரம்பமாகி திருப்பலியில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பங்கு மக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
நேற்று சனிக்கிழமை திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு அன்னதான நிகழ்வும் முன்னெடுக்கப்படவுள்ளது.
மக்களின் பாதுகாப்பு கருதி
திருவிழா திருப்பலியை முன்னிட்டு ஆலய வளாகத்தை சுற்றி மருதங்கேணி பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்