Sat. Jul 13th, 2024

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரா் ஆலய திருவிழாவை குழப்பும் பொலிஸாா்.

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரா் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை குழப்பும் வகையில் பொலிஸாா் தொடா்ச்சியாக குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டும் மக்கள்,

ஒலி பெருக்கி பாவனையை தடுப்பதற்காக தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியை கேட்டு நெருக்கடியை கொடுப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.

நெடுங்கேணியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாட்டுக்கு தொடர்ந்தும் தடையாக இருக்கும் தொல்லியல் திணைக்களத்தினர்

தற்போது ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பத்து நாட்களைக் கொண்ட திருவிழாக்களின் போதும்  பல இடையூறுகளை ஏற்படுத்துவதாகவே அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக நேற்றைய தினம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகிய நிலையில் பத்து தினங்கள் இடம்பெறும் குறித்த உற்சவத்தின்போது ஒலி வருகைக்காக

நெடுங்கேணி போலீசாரை ஆலய நிர்வாகத்தினர் நாடி உள்ளனர். இருப்பினும் குறித்த ஆலயத்தில் ஒலிபெருக்கி பயன்பாடு மேற்கொள்ள அதற்கான அனுமதியை வழங்குவதானால்

தொல்லியல் திணைக்களத்தின் அனுமதி கடிதத்தை சமர்ப்பித்தால் மட்டுமே  ஒலிபெருக்கி அதற்கான அனுமதியை வழங்க முடியும் என நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எந்தவித ஒலிபெருக்கி பாவனை இன்று திருவிழா இடம்பெறுவதாக

ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்