“வீரர்களின் போர்” எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது
நாட்டிலேற்பட்ட அசாதாரண காலநிலை (வெப்பம்) மாற்றம் காரணமாகவும் பாடசாலைகளின் நெருக்கடியான சூழ்நிலை காரணமாகவும் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடைபெறவேண்டிய “ வீரர்களின் போர் “ என வருணிக்கப்படும்
யா/மகாஜனக் கல்லூரியும்
யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரியும்
மோதும் துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் 7, 8 ஆம் திகதிகளில் (எதிர்வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்)
யா/மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதேவேளை பழைய மாணவர்கள் மோதும் “நண்பர்களின் போர்” என வருணிக்கப்படும்
T/20 துடுப்பாட்டப் போட்டி 09.09.2024 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இதில் 7,8ம் திகதிகளில் நடைபெறவுள்ள போட்டி மகாஜனக் கல்லூரி முதல்வர் இ.புஸ்பரட்ணம், ஸ்கந்தவரோதயக் கல்லூரி முதல்வர் மு.செல்வஸ்தான் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட ஓய்வுநிலை விளையாட்டு அதிகாரியும் மகாஜனக் கல்லூரி அவுஸ்திரேலியா கிளையின் பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த பா.கிருபாகரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மகாஜனக் கல்லூரியின் ஐக்கிய ராஜ்யம் கிளையின் பழைய மாணவர் சங்க செயலாளர் யு.ரூபராஜ், யாழ் மாவட்ட துடுப்பாட்ட பயிற்றுநர் எஸ்.சுரேஸ்மோகன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
மறுநாள் நடைபெறும் போட்டிக்கு முதன்மை விருந்தினராக தேசிய சேமிப்பு வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் ந்.பகீரதன், சிறப்பு விருந்தினராக சமாதான நீதவானும் வலி மேற்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் லோ.ரமணன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.