Thu. Oct 3rd, 2024

“வீரர்களின் போர்”முதலாவது இனிங்ஸில் ஸ்கந்தா 196 ஓட்டங்களை குவிப்பு

வீரர்களின் போர் 2024
முதல் இனிங்ஸில் ஸ்கந்தா 196 ஓட்டங்களையும்,
மகாஜனா கல்லூரி  05 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களையும் பெற்றனர்.
மகாஜனா – ஸ்கந்தா மோதும் “வீரர்களின் போர்” என வருணிக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டியில் முதலாவது இனிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி 67 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது.
முதலாவது இனிங்ஸில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி சார்பில் தர்மிலன் 45 ஓட்டங்களையும் டிலக்சன் 39 ஓட்டங்களையும் பிரணவன் 28 ஓட்டங்களையும் சீராளன் 23 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்து வீச்சில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி சார்பில் ஜோவெல் றொசான் 73 ஓட்டங்களை கொடுத்து 8 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு முதலாவது இனிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி ஆட்டநேர முடிவில்    28 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
துடுப்பாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சார்பில் கஜித் 20 ஓட்டங்களையும் அபிசாந் 16 ஓட்டங்களையும் ஜோவெல் றொசான் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் கஜானன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்