Sat. Dec 7th, 2024

“வீரசூரி” விருதுக்கான விண்ணப்பம் கோரல்

வீரசூரி விருதுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தால் விளையாட்டு துறையில்  மாணவர்களை சாதிக்க செய்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உயர் விருதான வீரசூரி விருது வழங்கப் படவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் யாழ் பல்கலைகழகத்தில் உடற்கல்வி டிப்ளோமா பட்டம் பெற்று ஆசிரிய நியமனம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு  நியமனம் பெற்ற பாடசாலையிலோ அல்லது இடமாற்றம் பெற்ற பாடசாலையிலோ மாணவர்களை விளையாட்டில் தேசிய வெற்றியை பெறச்செய்திருத்தல் வேண்டும். 2019ம் ஆண்டுக்கு பின்னர் மாணவர்களின் மூலம் தேசிய வெற்றியை பெற்றுக் கொண்டவர்கள் அதிபரின் அல்லது உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் எதிர்வரும் 9ம் திகதிக்கு முன்னர் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்துக்கு அனுப்பிவைக்குமாறு

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கேட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்