வீதி புனரமைப்புக்கான பெயர் பலகை திரைநீக்கம்
போக்குவரத்து, பெருந்தெருக்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படவுள்ள செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்பகுதியில் இரண்டாவது வீதி 590 மீட்டர் புனரமைப்புக்கான பெயர்ப்பலகைதிரை நீக்கல் நிகழ்வு இன்றைய தினம் 12:45 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் போக்குவரத்து பெருந்தெருக்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அமைச்சின் பிரதி அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி, வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளர் வல்வெட்டி துறை நகர சபை உறுப்பினர்கள், பருத்தித் துறை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், பிரஜா சக்தி தலைவர்கள் உறுப்பினர்கள் என்.பி.பி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் முன்னதாக வருக தந்த போக்குவரத்து பெருந்தெருக்கள் நகர அபிவிருத்தி வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதி அமைச்சர் சன்நிதி முருகன் ஆலயத்திற்கு சென்றார். அங்கு பிரதி அமைச்சர் விசேட வழிபாடுகளிலும் பங்கெடுத்திருந்தார்.