Fri. Jan 17th, 2025

வீதி ஓட்டத்தில் யாழ் பல்கலைக்கழகம் தங்கம் 

பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான வீதி ஓட்டத்தில் யாழ் பல்கலைக் கழகம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான 13வது விளையாட்டு விழாவில் யாழ் பல்கலைக்கழகம் வீதி ஓட்டத்தில் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதுடன் எஸ். நிர்மல் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்துள்ளார்.
இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான வீதி ஓட்டம் றுகுணு பல்கலைக்கழக வீதியில் நடைபெற்றது.
இதில் யாழ் பல்கலைக் கழகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.நிர்மல், ரி.எச்.என்.ஏ.தென்னக்கோன், ஏ.சிரோன்பெர்னாண்டோ, எஸ். எழிலன்,  ஆர்.சாம் ராவிட், எல்.சுதர்சன்,  டி.கோகிலராஜ் ஆகியோர் கலந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்