Thu. May 21st, 2026

வீதியை விட்டு விலகி வான் விபத்து , சாரதி தப்பியோட்டம்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில் நேற்று (3) மாலை ஐந்து மணியளவில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி தொலைப்பேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வானின் சாரதி வானை கைவிட்டுவிட்டு தலைமறைவாகியிருப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வான்வீதியை விட்டு இறங்கி விபத்துக்கு உள்ளனாவுடன் சாரதி இறங்கி வேனினை மூடி தாழ்பால் இட்டுவிட்டு சென்றதாகச் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாரதி எந்தவித தகவலும் வழங்காமல் தப்பியோடி உள்ளமையால் பொலிஸார் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்று வித்துள்ளன.

வாகனத்தின் சாரதி போதையில் வாகனம் செலுத்தினாரா? அல்லது சட்ட விரோத பொருட்கள் ஏதும் குறித்த வேனில் உள்ளனவா? அல்லது வேறு ஏதும் காரணங்களினால் தலைமறைவாகினாரா? போன்று பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த வான் பாதுகாப்பாக அகற்றப்படாதவிடுத்து , மேலும் கீழ் நோக்கி பள்ளத்தில் செல்லும் அபாயம் உள்ளதாகவும் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed