வீதியில் மணலை கொட்டி, தொலைத் தொடா்பு வயா்களை அறுத்து மணல் கொள்ளையா்கள் அட்டகாசம்!
அாியாலை- கிழக்கு பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்தவா்களை பொதுமக்கள் விரட்டியடித்த நிலை யில் கொள்ளையா்கள் மணலை வீதியில் கொட்டி, தொலை தொடா்பு வயா்களையும் அறுத்து சென்றுள்ளனா்.
சட்ட விரோதமான முறையில் மணலை கனகர வாகனத்தில் கடத்தல்காரர்கள் யாழ்ப்பாணம் நேக்கிக் கொண்டுசென்ற போது, மக்கள் வாகனத்தை துரத்தி வந்ததால் மணலை வீதியில் கொட்டிவிட்டு
அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. இதனால், யாழ்பாணம் கண்டி வீதியில், அரியாலை நெடுங்குளம் சந்தி பகுதியில் சுமார் 300 மீற்றர் வரையான வீதியில் மணல் பரவிக் கொட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். மணல் ஏற்றி வந்த கனகர வாகனம், இலங்கை தொலைத் தொடர்பு நிலையத்தின் வயர்கள் மற்றும் தூணையும்
சேதப்படுத்திச் சென்றுள்ளது. எனினும் குறித்த வாகனம் இதுவரை அடயாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணையை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
