Sun. Sep 15th, 2024

வீதிக்காக கொட்டப்பட்ட மண்ணில் இருந்து கைக்குண்டு மீட்பு!

மன்னார் ஓலைதொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்திக்கேன கொட்டப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கு இடமான கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
செட்டிகுளம் பகுதியில் இருந்து வீதி அமைப்பதற்காக ஓலைத்தொடுவாய் பகுதியில் கொட்டப்பட்ட கிறவல் வகை மண்ணில் இருந்தே மேற்கண்டவாறு கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கிறவல் மண்களை பரவும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் காணப்பட்ட வெடி பொருள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிக்கு தற்காலிக பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்