வீட்டுக்கு மணல் இறக்கவந்த டிப்பா் வாகனத்தில் சிக்கி 3 பிள்ளைகளின் தந்தை உயிாிழப்பு.
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா்.
குறித்த சம்பவம் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் ரிப்பர் வாகனத்தில் ஏறி சாரதியுடன் சினேகபூர்வமாக பேசி இறங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் சாரதியுடன் பேசிவிட்டு இறங்குகின்ற சந்தர்ப்பத்தில் சாரதி ரிப்பர் வாகனத்தை செலுத்தியுள்ளார்.
ரிப்பர் வாகனத்தின் மூலம் உயிரிழந்தவரின் வீட்டிற்கு மண் பறிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்போதே குறித்த ரிப்பர் வாகன சாரிதியுடன் உயிரிழந்த நபர் பேசியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சில்லுள் சிக்குண்ட நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
விபத்தில் முரசுமோட்டடை ஐயன்கோவிலடி பகுதியை சேர்ந்த அல்வின் அனுரா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ரிப்பர் வாகன சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்க எடுத்து செல்லப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்றமை தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் அனுமதியற்ற மணல் மற்றும் மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் பொலிசாருக்கு பிரதேச மக்களால் பலமுறை தகவல் வழங்கியும்
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.