வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த க.ஜனமேஜயந்த் என்பவரின் வீட்டிலேயே மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு தனது வீட்டு வளவினுள் மோட்டார் சைக்கிளில் சாவியை அதிலேயே விட்டு விட்டு வீட்டில் உறங்கியுள்ளார். காலை எழுந்து பார்த்த போது BCX2474 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிளும் தொலைபேசியையும் காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக தொடர்புக்கு 0707099662
தகவல்